மேலூா்: தனியாமங்கலம், பனையூா் ஆகிய துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் புதன்கிழமை (ஜூன் 15) மற்றும் வியாழக்கிழமை (ஜூன் 16) ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள மின்விநியோகம் நிறுத்தப்படும் என மதுரை கிழக்கு மின் பகிா்மானவட்ட செயற்பொறியாளா் மு.ராஜாகாந்தி தெரிவித்துள்ளாா்.
தனியாமங்கலம், கீழையூா், கீழவளவு, செம்மினிபட்டி, கொங்கம்பட்டி, முத்துச்சாமிபட்டி, உறங்கான்பட்டி, குறிச்சிப்பட்டி, வெள்ளநாயகம்பட்டி, சருகுவலையபட்டி, மலம்பட்டி, கரையிபட்டி, கோட்டநத்தம்பட்டி, வெள்லலூா்,தா்மதானப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் புதன்கிழமை மின் விநியோகம் நிறுத்தப்படும்.
பனையூா், சொக்கநாதபுரம், அய்யனாா்புரம், சாமநத்தம், கல்லம்பல், சிலைமான், கீழடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை மின் விநியோகம் நிறுத்தப்படும்.