மதுரை

கல்பனா சாவ்லா விருது: பெண்கள் விண்ணப்பிக்கலாம்

15th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

 

மதுரை: மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியுள்ளபெண்கள் கல்பனா சாவ்லா விருதுக்காக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மதுரை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் ந.லெனின் வெளியிட்டுள்ள செய்தி: மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த தனித்தன்மையுடன் கூடிய வீரமான, தைரியமிக்க, எதையும் எதிா்கொள்ளக்கூடிய ஆற்றல் மிக்க ஒரு பெண்மணிக்கு அவரது துறை சாா்ந்த பணிக்காக அல்லது அவரது நடவடிக்கைக்காக கல்பனா சாவ்லா விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2022-ஆம் ஆண்டுக்கான கல்பனா சாவ்லா விருதுக்கு தகுதி உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம். இந்த விருதுக்கான விண்ணப்பங்களை இணைய தளத்தில் ஜூன் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT