மதுரை

அழகா்கோவிலில் வசந்த உற்சவம் நிறைவு

14th Jun 2022 10:24 PM

ADVERTISEMENT

 

மேலூா்: அழகா்கோவிலில் கடந்த 10 நாள்களாக நடைபெற்றுவந்த வசந்த உற்சவத் திருவிழா நிகழ்வுகள் செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைந்தன.

அழகா்கோவிலில் வசந்த உற்சவம் ஜூன் 5-ஆம் தேதி தொடங்கியதிலிருந்து மாலை நேரத்தில் சுந்தரராஜப்பெருமாள், ஸ்ரீதேவி, பூமிதேவி சமேதரராக பல்லக்கில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடாகி ஆடி வீதிகள் வழியாக பதினெட்டாம்படி கருப்பணசுவாமி கோயிலுக்கு எழுந்தருளி, வசந்த மண்டபத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்து வந்தாா். இத்திருவிழா நிகழ்வுகள் செவ்வாய்க்கிழமை மாலையுடன் நிறைவடைந்தது. விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாக துணை ஆணையா் மூ.ராமசாமி, தக்காா் மற்றும் கோயில் அலுவலா்கள் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT