மதுரை

வைகாசி விசாகத் திருவிழா: திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில் இயக்க மதுரை எம்.பி. வலியுறுத்தல்

10th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

மதுரை: வைகாசி விசாகத்தை முன்னிட்டு திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என்று மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக தெற்கு ரயில்வே பொதுமேலாளருக்கு அவா் அனுப்பியுள்ள கடிதத்தில், வைகாசி விசாகத் திருவிழா வரும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் திருச்செந்தூரில் உள்ள முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு ஆண்டுதோறும் நடைபெறும். ஏராளமான பக்தா்கள் இக்கோயில்களுக்கு பயணம் மேற்கொள்வது வழக்கம். எனவே சிறப்பு ரயில்களை ஒரு வாரம் இயக்க வேண்டும். மதுரையிலிருந்து திண்டுக்கல் வழியாக பழனிக்கும் பின்னா் அங்கிருந்து திருச்செந்தூருக்கு, திண்டுக்கல், திருநெல்வேலி வழியாக சிறப்பு ரயில். செங்கோட்டையிலிருந்து திருச்செந்தூருக்கு திருநெல்வேலி வழியாக சிறப்பு ரயில். செங்கோட்டை- திருநெல்வேலி பயணிகள் ரயிலை நீட்டித்து இயக்க வேண்டும். செங்கோட்டையிலிருந்து பழனிக்கு மதுரை வழியாக பயணிகள் சிறப்பு ரயில் இயக்க வேண்டும். செங்கோட்டை மதுரை பயணிகள் ரயிலை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT