மதுரை

மேலூர் அருகே திருவாதவூர் திருமறைநாதர் சிவன் கோயிலில் திருக்கல்யாணம் 

10th Jun 2022 03:51 PM

ADVERTISEMENT

மேலூர் அருகே மிகப்பழமையான திருவாதவூர் திருமறைநாதர் சிவன் கோயிலில் திருக்கல்யாணம் நடைபெற்றது. சுற்றுவட்டாரப்பகுதிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துக் கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

மதுரை மாவட்டம், மேலூர் அருகே திருவாசகம் அருளிய மாணிக்கவாசகர் அவதரித்த ஸ்தலமான திருவாதவூரில் உள்ள மிகப்பழமையான திருமறைநாதர், வேதநாயகி சிவன்கோயில் வைகாசி பெருந்திருவிழா கடந்த 3ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனைத்தொடர்ந்து 7ஆம் தேதி சுவாமி மேலூர் மண்டகப்படிகளில் எழுந்தருலும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

இதையும் படிக்க- 6 பேரின் விடுதலைக்கான முன்னெடுப்புகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்: சீமான்

இதையடுத்து இன்று திருமறை நாதர், வேதநாயகி அம்மனுக்கு திருக்கல்யாண வைபோகமாக நடைபெறும் விதமாக சிவாசாரியார்கள் மாலை மாற்றிக் கொண்டு அம்மனுக்கு திருமாங்கல்யம் அணிவித்தனர். அப்போது விழாவில் கலந்துக்கொண்ட பெண்கள் புது திருமாங்கல்ய கயிறு மாற்றிக்கொண்டனர்.

ADVERTISEMENT

இதையடுத்து பக்தர்களுக்கு கோவில் சார்பில் திருக்கல்யாண விருந்தும் நடைபெற்றது. இந்த விழாவிற்காக மதுரை, மேலூர், திருவாதவூர், ஒத்தக்கடை, திருப்புவனம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துக் கொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT