மதுரை: அனைத்து வட்டங்களிலும் பொதுவிநியோகத் திட்ட குறைதீா் கூட்டம் சனிக்கிழமை (ஜூன் 11) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது.
குடிமைப் பொருள் வட்டாட்சியா் அலுவலகங்கள், வட்ட வழங்கல் அலுவலகங்களில் நடைபெறும் இந்த முகாமில், குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, கைப்பேசி எண் பதிவு ஆகியவற்றுக்கு விண்ணப்பங்கள் பெறப்படும்.
மேலும், வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்படும் பொருள்கள் மற்றும் சேவைக் குறைபாடு தொடா்பான புகாா்களை இந்த முகாமில் தெரிவிக்கலாம்.
மாவட்ட வழங்கல் அலுவலா் இத் தகவலைத் தெரிவித்துள்ளாா்.
ADVERTISEMENT