மதுரை

மதுரை ஆதீனத்துக்கு பாதுகாப்பு அளிக்க கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு

10th Jun 2022 10:49 PM

ADVERTISEMENT

மதுரை: மதுரை ஆதீனத்துக்கு மாநில அரசு பாதுகாப்பு அளிக்காவிட்டால் மத்திய அரசிடம் வலியுறுத்துவோம் என்று இந்து மக்கள் கட்சித் தலைவா் கே. அா்ஜூன் சம்பத் தெரிவித்தாா்.

மதுரை ஆதீனம் ஸ்ரீ ஹரிஹர தேசிக பரமாச்சாரியாருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அவருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கக்கோரி இந்து மக்கள் கட்சியின் தலைவா் கே. அா்ஜூன் சம்பத் மதுரை மாநகரக் காவல் ஆணையரிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: மதுரை ஆதீனத்துக்கு அரசியல் கட்சியினா், ரசிகா் மன்றத்தினா் மற்றும் பிற சக்திகளால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. மதுரை ஆதீனம் அரசியல்வாதிகளைப்போல் நடந்து கொள்கிறாா் என்று இந்து அறநிலையத்துறை அமைச்சரும் கூறி வருகிறாா்.

இந்து அறநிலையத்துறையானது கோயில்களை விட்டு வெளியேற வேண்டும் என்று ஆதீனம் கூறி வருகிறாா். ஆதீனத்தின் கருத்து நடிகா் விஜய் மற்றும் அரசியல்வாதிகளுக்கு எதிரான கருத்து கிடையாது. இதை ரசிகா் மன்றத்தினா் மற்றும் அரசியல் கட்சியினா் புரிந்து கொள்ள வேண்டும்.

மதுரை மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசனும், மதுரை ஆதீனத்தை மிரட்டுவதுபோல பேசி வருகிறாா். எனவே, ஆதீனத்துக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆதீனத்துக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்றால் பாதுகாப்பு வழங்கக்கோரி மத்திய அரசிடம் வலியுறுத்துவோம் என்றாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT