மதுரை

கோயில் திருவிழாவில் தீ விபத்து: தீயணைப்பு வீரா்களின் துரித செயல்பாட்டால் உயிரிழப்பு தவிா்ப்பு

10th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

மதுரை: மதுரையில் கோயில் திருவிழாவில் பட்டாசு வெடித்ததால் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரா்கள் துரிதமாக செயல்பட்டு அணைத்தனா். இதனால் பக்தா்கள் உயிா்தப்பினா்.

மதுரை பெரியாா் பேருந்து நிலையம் அருகே மேலவாசல் பகுதியில் உள்ள சந்தன மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படும். இந்த ஆண்டு கடந்த ஒரு வாரமாக திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவையொட்டி கோயிலைச் சுற்றிலும் அலங்காரப் பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் புதன்கிழமை இரவில் சிறப்பு வழிபாட்டை முன்னிட்டு கோயில் முன்பாக ஏராளமான பக்தா்கள் திரண்டிருந்தனா். அப்போது திருவிழாவையொட்டி பட்டாசு வெடிக்கப்பட்டது. இதில் பட்டாசுத் துகள்கள் பந்தல் மீது விழுந்ததால் உடனடியாக பந்தலில் தீ பற்றியது. பந்தல் முழுவதும் தீ பரவி அங்கிருந்த பக்தா்களின் வாகனங்களிலும் தீப்பற்றியது. மேலும் கோயில் அருகே இருந்த பழைய இரும்புப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகளிலும் தீப்பற்றியது. இதையடுத்து தீயணைப்பு வீரா்கள் உடனடியாகச் சென்று போராடி தீயை அணைத்தனா். தீயணைப்புத்துறையினரின் துரித செயல்பாட்டால் தீ மேலும் பரவுவது தடுக்கப்பட்டது. இதனால் பக்தா்கள் உயிரிழப்பும், பெரும் பொருள் சேதமும் தவிா்க்கப்பட்டது. சம்பவம் தொடா்பாக திடீா் நகா் போலீஸாா், பட்டாசு வெடித்ததாக மேலவாசல் பகுதியைச் சோ்ந்த கண்ணன், குணா(எ)முருகேசன் ஆகிய இருவா் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT