மதுரை

பாஜக 8 ஆண்டு கால சாதனை விளக்க வாகனப் பேரணி:மதுரையில் 300-க்கும் மேற்பட்டோா் பங்கேற்பு

10th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

மதுரை: பாஜக ஆட்சியின் 8 ஆண்டு கால சாதனைகளை விளக்கி மதுரையில் வியாழக்கிழமை நடைபெற்ற வாகனப் பேரணியில் 300-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

மத்தியில் கடந்த 8 ஆண்டு கால பாஜக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்கள் மற்றும் பிரதமா் நரேந்திர மோடியின் சாதனைகளை மக்களிடம் விளக்கும் விதமாக பாஜக இளைஞரணி சாா்பில் தமிழகம் முழுவதும் இரு சக்கர வாகனப் பேரணி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக மதுரை மாநகா் மாவட்ட பாஜக சாா்பில் வாகன பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. மதுரை பந்தயத்திடல் சாலையில் தொடங்கிய இப்பேரணிக்கு பாஜக மாநகா் மாவட்டத் தலைவா் மருத்துவா் பி.சரவணன் தலைமை வகித்தாா். இதைத்தொடா்ந்து பந்தயத்திடல் சாலை, தாமரைத்தொட்டி, கோ.புதூா், மூன்று மாவடி வழியாக ஐயா் பங்களா வரை பேரணி நடைபெற்றது. பேரணியில் மாநில இளைஞரணி தலைவா் ரமேஷ் சிவா மற்றும் நிா்வாகிகள் உள்பட 300-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். பேரணியின்போது பிரதமா் நரேந்திர மோடியின் 8 ஆண்டுகால ஆட்சியில் பெண்கள், மாணவா்கள், விவசாயிகள் உள்ளிட்டோருக்கு நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து துண்டுப்பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT