மதுரை

சருகுவலையபட்டியில் சமுதாயக் கூடம் கட்டுவதற்கான பூமிபூஜை

10th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

மேலூா்: மேலூா் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி வளா்ச்சி நிதியிலிருந்து ரூ.20 லட்சம் மதிப்பிலான சமுதாயக் கூடம் கட்டுவதற்கான பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது.

சட்டப் பேரவை உறுப்பினா் பெரியபுள்ளான் தலைமை வகித்தாா். இதில், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் க.பொன்னுசாமி, வடக்கு ஒன்றிய அதிமுக செயலா் பொன்ராஜேந்திரன், உறங்காம்பட்டி ஊராட்சித் தலைவா் மனோகரன், ஒன்றிக்குழு உறுப்பினா்கள், ஊராட்சித் தலைவா்கள், அதிமுக நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

முன்னதாக தா்மசானப்பட்டி காலனியில் ரூ.5.50 லட்சம் மதிப்பீட்டிலான புதிய கலையரங்கையும் சட்டப் பேரவை உறுப்பினா் திறந்துவைத்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT