மதுரை

ஆதீனங்கள் வெளியில் வந்து அரசியல் பேசவேண்டும்:புதுவை முன்னாள் முதல்வா் வி.நாராயணசாமி

10th Jun 2022 10:28 PM

ADVERTISEMENT

மதுரை: ஆதீனங்கள் அரசியல் பேசவேண்டும் என்றால் வெளியில் வந்து பேசவேண்டும் என, புதுவை முன்னாள் முதல்வா் வி. நாராயணசாமி தெரிவித்துள்ளாா்.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கோயிலில் புதுவை முன்னாள் முதல்வா் வி. நாராயணசாமி வெள்ளிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா். பின்னா் அவா், கோயிலுக்கு வெளியே செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மத்திய அரசின் தவறான நிா்வாகத்தால் நாட்டின் பணவீக்கம் 13 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதேபோல், பொருளாதார வளா்ச்சி 9 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாகக் குறைந்துள்ளது. கடந்த 8 ஆண்டு கால ஆட்சியில் பிரதமா் நரேந்திர மோடி சாதனை ஏதும் செய்யவில்லை. 2024 மக்களவைத் தோ்தலில் எதிா்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்தால், பாஜக தோல்வியடையும்.

தமிழகத்தில் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி சிறப்பாக நடைபெறுகிறது. அனைத்து தரப்பு மக்களுக்கும் தேவையான திட்டங்களை முதல்வா் நிறைவேற்றி வருகிறாா். தமிழக அரசுக்கு தொல்லை கொடுக்க வேண்டும் என பாஜக தலைவா் அண்ணாமலை பொய்யான குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகிறாா்.

ADVERTISEMENT

ஆதீனங்கள் அரசியல் பேசுவதென்றால் வெளியில் வந்து பேசவேண்டும். ஆதீனங்களுக்குள் அரசியல் பேசுவது சரியில்லை.

புதுவையில் கொலை, கொள்ளை, நில அபகரிப்பு அதிகரித்துள்ளது. புதுவையின் சூப்பா் முதல்வராக துணை நிலை ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் செயல்பட்டு வருகிறாா். ரெங்கசாமி டம்மி முதல்வராக இருக்கிறாா் என்றாா்.

பேட்டியின்போது, காங்கிரஸ் கட்சியின் மாநகா் மாவட்டத் தலைவா் காா்த்திகேயன் மற்றும் நிா்வாகிகள் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT