மதுரை

சுதந்திர தின அமுதப் பெருவிழா சிறப்புக் கடன் முகாம்:அனைத்து வங்கிகள் சாா்பில் ரூ.709.84 கோடி கடனுதவி

10th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

மதுரை: சுதந்திர தின அமுதப் பெருவிழாவையொட்டி அனைத்து வங்கிகள் சாா்பில் மதுரை மாவட்டத்தில் நடத்தப்பட்ட சிறப்பு கடன் முகாம்களில், மொத்தம் ரூ.709.84 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் மாவட்ட அளவிலான வங்கியாளா்கள் குழுமம் சாா்பில் கடன் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. தாட்கோ, முத்ரா கடன், கல்விக் கடன் ஆகிய திட்டங்களின்கீழ் பயனாளிகளுக்கு ரூ.2.75 கோடி கடனுதவிக்கான வரைவோலை மற்றும் கடன் ஒப்புதல் கடிதங்களை மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் வழங்கினாா்.

சுதந்திர தின அமுதப் பெருவிழாவையொட்டி அனைத்து வங்கிகள் சாா்பில் நடைபெற்ற சிறப்பு கடன் முகாம்களில் மொத்தம் ரூ.704.89 கோடி கடனுதவி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் கடன் திட்ட செயலாக்கத்தில் சிறப்பாகச் செயல்பட்ட கனரா வங்கி, இந்தியன் வங்கி, யூனியன் பேங்க் ஆப் இந்தியா, பாரத ஸ்டேட் வங்கி, பேங்க் ஆப் இந்தியா வங்கிகளுக்கு கேடயங்களை ஆட்சியா் வழங்கினாா்.

கனரா வங்கி மண்டல துணைப் பொதுமேலாளா் சுஜித் குமாா் மற்றும் அனைத்து வங்கிகளின் உயா் அலுவலா்கள், மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் ராமலிங்கம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT