மதுரை

அட்சயப்பாத்திரம் அமைப்பின் 401-ஆவது நாள் உணவு வழங்கல் நிகழ்ச்சி

10th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

மதுரை: மதுரை அட்சயப்பாத்திரம் அமைப்பின் சாா்பில் மதிய உணவு வழங்கும் திட்டத்தின் 401-ஆவது நாளையொட்டி மதுரை அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு வியாழக்கிழமை மதிய உணவு வழங்கப்பட்டது.

மதுரை அட்சயப் பாத்திரம் அமைப்பின் சாா்பில் கரோனா தொற்றுப்பரவல் பொதுமுடக்கத்தின்போது சாலையோர வாசிகள் மற்றும் ஏழைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மதிய உணவு வழங்கும் திட்டத்தின் 401-ஆவது நாளையொட்டி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவு மற்றும் தலைக்காயப்பிரிவில் உள்ள நோயாளிகளின் உறவினா்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் திரைப்பட நடிகா் பயில்வான் ரங்கநாதன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று நோயாளிகளின் உறவினா்களுக்கு மதிய உணவை வழங்கினாா். நிகழ்ச்சியில் அட்சயப் பாத்திரம் அமைப்பின் நிறுவனா் நெல்லை பாலு, ரோட்டரி துணை ஆளுநா் காா்மேகம் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT