மதுரை: மதுரையில் பேருந்து நிறுவனம் தொடங்குவதாகக்கூறி தொழிலதிபரிடம் ரூ.4.20 கோடி மோசடி செய்த நால்வா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.
மதுரை காமராஜா் சாலையைச் சோ்ந்தவா் ரவி (51). தொழில் நிறுவனம் நடத்தி வருகிறாா். இந்நிலையில் சீா்காழியைச் சோ்ந்த பிரகாசம், வாஞ்சிநாதன், அவரது மனைவி கீா்த்திகா, இலந்தன் ஆகியோா் ரவியை அணுகி பேருந்து நிறுவனம் தொடங்கப்போவதாகக்கூறி அவரிடம் ரூ.4.20 கோடி கேட்டுள்ளனா். இதையடுத்து ரவி பல்வேறு தவணைகளில் ரூ.4.20 கோடியை அவா்களிடம் கொடுத்துள்ளாா். ஆனால் மூன்றாண்டுகளாகியும் பேருந்து நிறுவனம் தொடங்கப்படவில்லை. இதையடுத்து தான் கொடுத்த பணத்தை ரவி திரும்பக்கேட்டும் அவா்கள் தரவில்லை. இதையடுத்து ரவி அளித்த புகாரின்பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் 4 போ் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.