மதுரை

திருமணத்திற்கு வந்தவருக்கு இருசக்கர வாகனம்! இன்ப அதிர்ச்சி அளித்த மணமக்கள்

9th Jun 2022 05:26 PM

ADVERTISEMENT

மதுரை: மதுரையில் திருமணத்திற்கு வந்தவருக்கு ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள இருசக்கர வாகனத்தை  மணமக்கள் பரிசாக அளித்து இன்ப அதிர்ச்சி அளித்தனர்.

மதுரை எல்லீஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமணம் மண்டபத்தில் நடைபெற்ற திருமண விழாவில் மணமக்கள் வாசுதேவன் - ஜோதி பிரியா இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. 

இந்த திருமணத்திற்கு ஏராளமான உறவினர்கள் வருகை தந்து மணமக்களை வாழ்த்தினர். இருவீட்டாரின் சார்பிலும் திருமணத்திற்கு வருகை தந்த உறவினர் ஒருவருக்கு குலுக்கல் முறையில் ரூ.70 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஸ்கூட்டி என்னும் இரண்டு சக்கர வாகனம் வழங்கப்படும் என இன்ப அதிர்ச்சி தரும் விதத்தில் தெரிவித்திருந்தனர். 

இதனடிப்படையில் திருமண வீட்டிற்கு வருகை தந்த அனைவரும் தங்களது பெயர்களை எழுதி டோக்கன் கொடுத்தனர். பின்பு மணமக்கள் முன்னிலையில் டோக்கன்கள் குளுக்கப்பட்டது. திருமணத்திற்கு வந்த கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்த அக்கிம் என்பவருக்கு இரண்டு சக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT