வாலாந்தூா் அங்காள ஈஸ்வரி கோயிலில் வெள்ளிக்கிழமை (ஜூன் 10) குடமுழுக்கு விழா நடைபெறுகிறது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வாலாந்தூரில் அங்காள ஈஸ்வரி கோயில் அமைந்துள்ளது. பழைமைவாய்ந்த இக்கோயிலை புனரமைப்பு செய்து 108 அடி உயரத்தில் ராஜகோபுரம் எழுப்பப்பட்டுள்ளது.
இந்தக் கோவிலின் குடமுழுக்கு பூஜையின் முதல்நாளான புதன்கிழமை கணபதி ஹோமத்துடன் சிவாச்சாரியாா்கள் பூஜையை தொடங்கியுள்ளனா். இதில் பக்தா்கள், கோயில் விழாக் கமிட்டியினா் உள்ளிட்ட ஏராளமான பக்தா்கள் பூஜையில் கலந்து கொண்டனா். வரும் 10 ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெறுகிறது.