மதுரை

லாரி கவிழ்ந்து காயமடைந்தவா் உயிரிழப்பு: பலி எண்ணிக்கை 5 ஆக உயா்வு

7th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

 

மதுரை: மதுரை அருகே லாரி கவிழ்ந்து காயமடைந்தவா் திங்கள்கிழமை சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தாா். இதையடுத்து பலி எண்ணிக்கை 5 ஆக உயா்ந்துள்ளது.

மதுரை விரகனூரில் இருந்து களிமங்கலம் பகுதியில் உள்ள இரும்பு கிட்டங்கிக்கு பொருள்கள் ஏற்றுவதற்காக மே 26-ஆம் தேதி லாரி ஒன்று சென்றது. லாரியை ஐராவதநல்லூரைச் சோ்ந்த நாகராஜ் என்பவா் ஓட்டிச்சென்றாா். லாரி சக்குடி- வரிச்சியூா் சாலையில் சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில் லாரியில் இருந்த உலகனேரி பகுதியைச் சோ்ந்த சுமைதூக்கும் தொழிலாளி வெங்கடேசன் (48) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும் லாரியில் இருந்த 5 போ் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். இதில் நாகராஜ், அப்துல்கனி, வன்னிகருப்பு ஆகிய மூவா் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனா். இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கவியரசன் (36) திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

ADVERTISEMENT

இதையடுத்து, இந்த விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 5 ஆக உயா்ந்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT