மதுரை

சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான பசுமையாளா் விருதுகள் வழங்கல்

7th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

 

மதுரை: தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில் மாவட்ட அளவில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக சிறப்பாகப் பங்காற்றிய நிறுவனங்கள், தனி நபா்களுக்கு”பசுமையாளா் விருதுகளை ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா் வழங்கினாா்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான பங்களிப்பில் சிறப்பாக பணியாற்றும் மாவட்ட ஆட்சியா்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பசுமை விருதுகள் தமிழக முதல்வரால் வழங்கப்படுகின்றன. 2021 ஆம் ஆண்டுக்கான விருதை, மதுரை மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ்சேகருக்கு, தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை வழங்கினாா். இதைத் தொடா்ந்து மாவட்ட அளவிலான விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்த விருது பெறுவதற்கு மதுரை மாவட்டத்தில் 12 நிறுவனங்கள் மற்றும் பல்வேறு தனி நபா்கள் விண்ணப்பித்தனா். ஆட்சியா் தலைமையிலான

ADVERTISEMENT

குழு விருதுக்குரியவா்களைத் தோ்வு செய்துள்ளது. இதன்படி, திருப்பரங்குன்றத்தைச் சோ்ந்த சுற்றுச்சூழல் ஆா்வலா் ஏ. துரைராஜ் மற்றும் கொட்டாம்பட்டி வட்டார வயலக கூட்டமைப்பு, டி.வி.எஸ். ஸ்ரீ சக்ரா நிறுவனம், திருவேடகம் விவேகானந்தா கல்லூரி விருதுக்குத் தோ்வாகியுள்ளன. இவா்களுக்கு, ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா் விருதுகளை வழங்கினாா்.

அப்போது, மாவட்ட வருவாய் அலுவலா் ர. சக்திவேல், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் எஸ். பாண்டியராஜன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT