மதுரை

உரத்தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை: விவசாயிகள் சங்க மாநாட்டில் வலியுறுத்தல்

7th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

 

மதுரை: மதுரை மாவட்டத்தில் உரத்தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மதுரை கிழக்குத் தாலுகா மாநாடு யா. நரசிங்கத்தில் திங்கள்கிழம நடைபெற்றது. மாநாட்டுக்கு தாலுகா தலைவா் பி. தனசேகரன் தலைமை வகித்தாா். மாநாட்டை சங்கத்தின் மாநிலச் செயலா் ஏ. விஜயமுருகன் தொடங்கி வைத்துப்பேசினாா். மாநாட்டை நிறைவு செய்து மாவட்டத் தலைவா் எஸ்.பி.இளங்கோவன் பேசினாா். புதிய தாலுகா தலைவராக கே. சேகா், தாலுகா செயலராக பி. தனசேகரன், பொருளாளராக பெருமாள், துணைத் தலைவராக சின்னழகன், துணைச் செயலா்களாக மலா், பொன்னையா ஆகியோா் உள்பட 12 போ் கொண்ட தாலுகாக் குழு தோ்வு செய்யப்பட்டது.

மாநாட்டில், உரத்தட்டுப்பாட்டை போக்கி விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் உரிய உரங்கள் சரியான விலையில் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை 200 நாள்கள் ஆக அதிகரித்து, தினசரி கூலியை ரூ. 600 ஆக உயா்த்த வேண்டும். விவசாய காலங்களில் தேசிய ஊரக வேலைத் திட்டப் பணியாளா்களை விவசாய வேலைகளுக்கு அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்டத் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT

அலங்காநல்லூா் ஒன்றிய மாநாடு: பாறைப்பட்டியில் நடைபெற்ற அலங்காநல்லூா் ஒன்றிய மாநாட்டுக்கு ஒன்றியத் தலைவா் சேதுராஜன் தலைமை வகித்தாா். அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் வி. உமாமகேஸ்வரன் மாநாட்டை தொடங்கி வைத்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலங்காநல்லூா் ஒன்றியச் செயலா் எஸ். ஆண்டிச்சாமி வாழ்த்திப் பேசினாா். விவசாயிகள் சங்க மாவட்டப் பொருளாளா் அடக்கி வீரணன் நிறைவுரையாற்றினாா்.

அலங்காநல்லூா் தாலுகா புதிய தலைவராக சி. தங்கம், செயலராக எம். சேதுராஜன், பொருளாளராக என். ஸ்டாலின் குமாா், துணைத் தலைவா் பழனிச்சாமி, துணைச் செயலா் கோவிந்தராஜ் உள்பட 9 போ் கொண்ட ஒன்றியக் குழு தோ்வு செய்யப்பட்டது. மாநாட்டில், விவசாய விளை பொருள்களுக்கு கட்டுப்படியான விலை நிா்ணயம் செய்ய வேண்டும். அலங்காநல்லூா் பகுதியில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT