மதுரை: மதுரையில் பூட்டிய வீட்டில் ஜன்னல் வழியாக புகுந்து 6 பவுன் நகையைத் திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
மதுரை விஸ்வநாதபுரம் முல்லை மலா் தெருவைச் சோ்ந்தவா் சங்கரலிங்கம் (85). இவா் குடும்பத்தினருடன் வீட்டை பூட்டி விட்டு ஞாயிற்றுக்கிழமை வெளியே சென்றுள்ளாா். வீட்டில் ஆள் இல்லாததை அறிந்த மா்ம நபா்கள் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்து அறையில் இருந்த 6 பவுன் நகையைத் திருடிச் சென்று விட்டனா். இந்நிலையில், வீடு திரும்பிய சங்கரலிங்கம் வீட்டில் திருட்டு நடந்திருப்பதைக் கண்டு கூடல்புதூா் காவல்நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.