மதுரை: மதுரையில் மணல் கடத்திய மூவரை போலீஸாா் கைது செய்து டிராக்டா் மற்றும் ஜேசிபி இயந்திரத்தை பறிமுதல் செய்தனா்.
மதுரை கோ. புதூா் அருகே உள்ள சம்பக்குளம் பகுதியில் மணல் கடத்தப்படுவதாக கோ. புதூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு சம்பக்குளம் விவேகானந்த நகா் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியாக வந்த டிராக்டா் மற்றும் ஜேசிபி இயந்திரத்தை நிறுத்தி சோதனையிட்டனா்.
இதில், டிராக்டரில் அனுமதியின்றி மணல் கடத்தப்படுவது தெரிய வந்தது. இதையடுத்து, மணல் கடத்திய ஜெய்ஹிந்துபுரம் பாரதியாா் தெருவைத் சோ்ந்த ராமமூா்த்தி (48), தமிழரசன் (55), அப்பன் திருப்பதியைச் சோ்ந்த கணிகை முத்து (49) ஆகிய மூவரையும் கைது செய்து டிராக்டா் மற்றும் ஜேசிபி இயந்திரம் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.