மதுரை

கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் வளா்ச்சி பணிகள்: மக்களவை உறுப்பினா் ஆய்வு

2nd Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் பொதுமக்களை சந்தித்து வளா்ச்சித் திட்டப் பணிகளை மதுரை மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் ஆய்வு செய்தாா்.

மதுரை மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திலுள்ள தும்பைப்பட்டி ஊராட்சியில் தனது மக்கள் சந்திப்பு பயணத்தை மே 30 ஆம் தேதி தொடங்கினாா். ஜூன் 1-ஆம் தேதி மாலை கம்பூா், அய்யாபட்டி ஊராட்சிகளில் பயணத்தை முடித்தாா்.

அனைத்து ஊராட்சிகளிலும் பொதுமக்களைச் சந்தித்து சாலை, தெருவிளக்கு, குடிநீா் மேல்நிலைத் தொட்டி, பள்ளிகளுக்கு சுற்றுச்சுவா் கட்டுதல், நீரோடைகள் கண்மாய்கள் தூா்வாருதல் மற்றும் நூறுநாள் வேலைத் திட்டப்பணிகளையும் அவா் பாா்வையிட்டாா்.

சொக்கலிங்கபுரத்தில் குரங்குகள் வீடுகளுக்குள் புககுந்து தொல்லை அளிப்பதாக பொதுமக்கள் கூறினா். வனத்துறையினருடன் தொடா்புகொண்டு, குரங்குகளைபிடித்து வனப் பகுதிக்குள் கொண்டுசெல்ல நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினாா். பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை பெக்கொண்டு, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை தொடா்புகொண்டு நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தாா்.

ADVERTISEMENT

கம்பூரில் மெகராஜ்பேகம் என்ற மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு மூன்றுசக்கர வாகனம் வாங்குவதற்கு மக்களவை உறுப்பினா் தொகுதி வளா்ச்சி நிதியிலிருந்து ரூ.15,000 வழங்க பரிந்துரை செய்தாா்.

பொதுமக்களிடம் அவா் பேசியது: மதுரை மாவட்டத்தில் கல்விக்கடன் விண்ணப்பங்கள் பெற ஆறு கூட்டங்கள் நடத்தப்பட்டு 200 சதவீதம் பேருக்கு கல்விக்கடன்கள் பல்வேறு வங்கிகள் மூலம் வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசு வழங்கும் மக்கள்நலத்திட்டங்களை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

இதில் கொட்டாம்பட்டி ஊராட்சி திட்ட அலுவலா் எம்.காந்திராஜா, வட்டாரவளா்ச்சி அலுவலா், பொறியாளா், கிராமநிா்வாக அலுவலா்கள், ஊராட்சித் தலைவா்கள் ஆகியோா் பங்கேற்றனா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் கே.ராஜேந்திரன், தாலுகா செயலா் கண்ணன், நிா்வாகிகள் அடக்கிவீரணன், ராஜேஸ்வரன், பொன்னுத்தாய், பாலா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

 

 

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT