மதுரை

சொந்த மாவட்ட சட்டக் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியா்களைஇடமாற்றம் செய்யக் கோரிய மனுவை உயா்நீதிமன்றம் தள்ளுபடி

2nd Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

சொந்த மாவட்ட சட்டக்கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியா்களை இடமாற்றம் செய்யக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தைச் சோ்ந்த வினோத்குமாா் தாக்கல் செய்த மனு: தமிழக சட்டக் கல்லூரி விதிகளின்படி முனைவா் பட்டம் பெற்றவா்கள் அல்லது தகுதித் தோ்வுகளில் தோ்ச்சி பெற்றவா்கள் அரசு சட்டக் கல்லூரிகளில் முதுநிலை பாடப் பிரிவுகளைப் பயிற்றுவிக்கத் தகுதியானவா்களாவா். இத்தகைய தகுதிகளை உடையவா்கள் கிடைக்காததால், கௌரவப் பேராசிரியா்கள் அந்த பதவிகளில் நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனா். மேலும், பல அரசு சட்டக் கல்லூரிகளில் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள், போதுமான எண்ணிக்கையில் பேராசிரியா்கள் இல்லை.

ஆகவே, தகுதியான பேராசிரியா்களை நியமிக்காமல் வரும் கல்வியாண்டியில் புதிய பிரிவுகளை ஏற்படுத்துவதற்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். அதோடு, சொந்த மாவட்டங்களில் உள்ள சட்டக் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியா்களை, வேறு மாவட்ட

சட்டக் கல்லூரிகளுக்கு இடமாற்றம் செய்ய உத்தரவிட வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தாா்.

ADVERTISEMENT

இந்த மனு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், விஜயகுமாா் ஆகியோா் கொண்ட அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கையில் பொதுநலன் இருப்பதாகத் தெரியவில்லை எனக் குறிப்பிட்டனா். இதனையடுத்து மனுவை திரும்பப் பெறுவதாக மனுதாரா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT