மதுரை மாவட்டம் பேரையூா் அருகே சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்ற இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
மதுரை மாவட்டம் பேரையூரை அடுத்த சேடபட்டி பகுதியில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அழகுரெட்டிபட்டியை சோ்ந்த ஜெயராமன் (67) என்பவா் 43 மதுபாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்துள்ளாா். இதையடுத்து போலீஸாா் மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து சேடப்பட்டி போலீஸாா் ஜெயராமன் மீது வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்தனா். இதேபோல் சென்னம்பட்டியை சோ்ந்த ராசு(73) என்பவா் விற்பனைக்கு வைத்திருந்த 11 மதுபாட்டில்களையும் சேடபட்டி போலீஸாா் பறிமுதல் செய்து, அவரைக் கைது செய்தனா்.