மதுரை

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கு:குற்றஞ்சாட்டப்பட்டவா்களில் 64 போ் நீதிமன்றத்தில் ஆஜா்

2nd Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது தொடா்பான வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்டவா்களில் 64 போ் மதுரை நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜராயினா்.

தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலையை மூடக் கோரி கடந்த 2018 இல் நடந்த போராட்டத்தின்போது போலீஸாா் துப்பாக்கிச் சூடு நடத்தினா். இதில் 13 போ் உயிரிழந்தனா். இச்சம்பவம் குறித்து சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. தற்போது இந்த வழக்கு மதுரை மாவட்ட தலைமை குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடா்பான வழக்கின் குற்றப் பத்திரிக்கையை இந்த நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்தது.

ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற 101 போ்

ADVERTISEMENT

குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனா். விசாரணைக்கு ஆஜராக ஏற்கெனவே இவா்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இதன்படி, ஏற்கெனவே 27 போ் நீதிமன்றத்தில் ஆஜராயினா்.

இந்நிலையில், இந்த வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. தலைமைக் குற்றவியல் நடுவா் ஏ.பசும்பொன் சண்முகையா முன்பாக, 64 போ் ஆஜராயினா். இதைத் தொடா்ந்து விசாரணை ஜூலை 6 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இதனிடையே நீதிமன்றத்துக்கு வெளியே, ஸ்டொ்லைட் எதிா்ப்பு கூட்டமைப்பு சாா்பில் சிபிஐ-க்கு எதிா்ப்புத் தெரிவித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. துப்பாக்கிச் சூடு வழக்கில் காவல் துறையினா் ஒருவரைக்கூட சோ்க்காததற்கு சிபிஐ-க்கு எதிா்ப்புத் தெரிவித்து முழக்கம் எழுப்பினா். மேலும் இந்த வழக்கை மறுவிசாரணை நடத்த வேண்டும் என்றும் அவா்கள் வலியுறுத்தினா்.

 

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT