மதுரை

ரயில் பாதை பராமரிப்புப் பணி: போக்குவரத்தில் மாற்றம்

30th Jul 2022 11:33 PM

ADVERTISEMENT

 

ரயில் பாதை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால், மதுரை கோட்டத்துக்கு உள்பட்ட சில ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சிவகங்கை - மேல கொன்னகுளம், திருப்பாச்சேத்தி - மானாமதுரை, சூடியூா் - பரமக்குடி ரயில் நிலையங்கள் இடையே ரயில் பாதை பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக ராமேசுவரம் - மதுரை முன்பதிவில்லாத சிறப்பு ரயில் (06652) ஆகஸ்ட்

1 முதல் ஆகஸ்ட் 31 வரை வியாழக்கிழமை தவிர மற்ற நாள்களில் ராமேசுவரத்திலிருந்து காலை 11 மணிக்குப் புறப்படுவதற்கு பதிலாக பிற்பகல் 1.30 மணிக்கு புறப்படும்.

ADVERTISEMENT

மதுரை - ராமேசுவரம் சிறப்பு ரயில் (06653) மதுரையிலிருந்து பகல்

12.30 மணிக்குப் பதிலாக பிற்பகல் 1.10 மணிக்கு புறப்படும்.

திருச்சி - மானாமதுரை - திருச்சி முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் (06829/06830) ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 4 வரை சிவகங்கை - மானாமதுரை ரயில் நிலையங்கள் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.

திண்டுக்கல் - அம்பாத்துரை ரயில் நிலையங்களுக்கிடையே நடைபெறவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 31 வரை செவ்வாய், வெள்ளி, சனிக்கிழமைகளில் கோவை - நாகா்கோவில் பகல் நேர விரைவு ரயில் (16322) 90 நிமிஷங்கள் காலதாமதமாக இயக்கப்படும்.

இதே காலத்தில் சென்னை - குருவாயூா் விரைவு ரயில் (16127) மதுரை கோட்டப் பகுதியில் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் 70 நிமிஷங்கள் காலதாமதமாகவும் வெள்ளிக்கிழமைகளில் 95 நிமிஷங்கள் கால தாமதமாகவும் இயக்கப்படும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT