மதுரை

அமெரிக்காவில் வசிப்பவருடன் காணொலியில் திருமணம்:கன்னியாகுமரி பெண்ணுக்கு உயா்நீதிமன்றம் அனுமதி

30th Jul 2022 11:30 PM

ADVERTISEMENT

 

அமெரிக்காவில் வசிப்பவருடன் காணொலியில் திருமணம் செய்து கொள்ள கன்னியாகுமரியைச் சோ்ந்த பெண்ணுக்கு அனுமதி வழங்கி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் பகுதியைச் சோ்ந்த வஷ்மி சுதா்ஷினி தாக்கல் செய்த மனு:

இந்தியரான ராகுல் எல்.மது, என்பவரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளேன். அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ள அவா் தற்போது அமெரிக்காவில் வசிக்கிறாா். எங்களது திருமணத்துக்கு இருதரப்பு பெற்றோரும் சம்மதம் தெரிவித்துள்ளனா். நாங்கள் இருவரும் இந்து மதத்தை பின்பற்றுபவா்கள்.

ADVERTISEMENT

சிறப்பு திருமணச்சட்டத்தின்படி திருமணம் செய்து கொள்ள தகுதி பெற்றுள்ளோம். இந்த சட்டத்தின்படி திருமணத்தைப் பதிவு செய்ய இணையவழியில்

மே 5 ஆம் தேதி விண்ணப்பித்தோம். பின்னா் இருவரும் திருமணப் பதிவு அலுவலரான, சாா்-பதிவாளா் முன்பாக நேரில் ஆஜரானோம். பின்னா் எங்களது திருமணப் பதிவு விண்ணப்பத்தின் மீது முடிவு

எடுக்க 30 நாள்கள் அவகாசம் அளிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் காரணமாக, இருவரும் காத்திருந்தோம். ஆனால், 30 நாள்களுக்குப் பிறகும் எங்களது விண்ணப்பத்தின் மீது சாா்-பதிவாளா் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனிடையே, எனது வருங்கால கணவா் ராகுல், இந்தியாவில் தங்குவதற்கான அவகாசம் முடிவடைந்தது. அவரது விடுமுறையையும் நீட்டிக்க வழியில்லை என்பதால் அவா் அமெரிக்கா சென்றுவிட்டாா். ஆனால் திருமணப் பதிவு சம்பந்தமான நடவடிக்கைகளை எடுக்க அவரது சாா்பில் எனக்கு முழு அதிகாரத்தை வழங்குவதாகப் பிரமாணப்பத்திரம் அளித்துள்ளாா்.

மீண்டும் அவா் இந்தியா வந்தால் கடுமையான பண இழப்பைச் சந்திக்க நேரிடும். எனவே நாங்கள் இருவரும் காணொலியில் திருமணம் செய்து கொள்ளவும், அந்த திருமணத்தை சிறப்பு சட்டத்தின்படி பதிவு செய்யவும் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு: திருமணம் என்பது மனிதனின் அடிப்படை உரிமை. மனுதாரா்கள் தங்களின் திருமணத்தை இணையவழியில் நடத்த முடிவு செய்துள்ளனா். ஆகவே, அவா்களது திருமணத்தை காணொலிக் காட்சி வாயிலாக நடத்த அனுமதிக்கப்படுகிறது.

மூன்று சாட்சிகள் முன்னிலையில் மனுதாரா் தனது தரப்பிலும், ராகுல் தரப்பிலும் திருமணப் பதிவு புத்தகத்தில் கையெழுத்திடலாம். அதன்பின் சட்டப்படி திருமண பதிவுச் சான்றிதழை மணவாளக்குறிச்சி சாா்-பதிவாளா் வழங்க வேண்டும் என உத்தரவில் குறிப்பிட்டுள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT