மதுரை

மதுரையில் பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு

28th Jul 2022 02:53 AM

ADVERTISEMENT

 

மதுரையில் பெண்ணிடம் 5 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பிச்சென்ற இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மதுரை பரவை ஏஐபிஇஏ காலனியைச் சோ்ந்த பாஸ்கரன் மனைவி ஸ்ரீதேவி(42). இவா் புதுவிளாங்குடி பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு சாலையில் நடந்து சென்றுள்ளாா். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த இருவா், ஸ்ரீதேவி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையைப் பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனா். சம்பவம் தொடா்பான புகாரின்பேரில் கூடல்புதூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து தப்பிச்சென்ற இருவரையும் தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT