மதுரை

பெண்ணை கால்வாயில் மூழ்கடித்துக் கொலை செய்தவருக்குஆயுள் தண்டனையை உறுதி செய்து உயா்நீதிமன்றம் தீா்ப்பு

28th Jul 2022 02:49 AM

ADVERTISEMENT

 

பாலியல் பலாத்கார முயற்சியின்போது பெண்ணை கால்வாயில் மூழ்கடித்து கொலை செய்தவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை தீா்ப்பளித்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியைச் சோ்ந்த மணிகண்டன், பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளாா். அப்பெண் கூச்சலிட்ட நிலையில், அவரை கால்வாயில் மூழ்கடித்து கொலை செய்துள்ளாா். கடந்த 2013-இல் நிகழ்ந்த இச்சம்பவத்தில், மணிகண்டனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனையை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆா்.ஹேமலதா ஆகியோா் கொண்ட அமா்வு, தண்டனையை உறுதி செய்து தீா்ப்பளித்தது.

ADVERTISEMENT

கால்வாயில் குளிக்கச் சென்ற பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று, அவா் கூச்சலிட்டதும், சிறிதும் இரக்கமின்றி கொலை செய்திருக்கிறாா். சாட்சிகள், ஆதாரங்கள், மருத்துவா் வாக்குமூலம், மருத்துவச் சான்று ஆகியவற்றின் அடிப்படையில் கீழமை நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது.

ஆண்களின் இச்சைக்கு அடிபணியாததால், இத்தகைய குற்றங்கள் நிகழ்கின்றன. பெண் மீதான காமம், ஆணின் பகுத்தறிவு சிந்தனையைக் குருடாக்கிவிட்டது. இந்த வழக்கில் குற்றவாளிக்கு தயவு தாட்சண்யம் காட்டுவதற்கு எவ்வித முகாந்திரமும் இல்லை. ஆகவே, கீழமை நீதிமன்றம் விதித்த தண்டனை உறுதி செய்யப்படுகிறது எனக் குறிப்பிட்டு மனுவை முடித்து வைத்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT