மதுரை

மாநகராட்சியில் குழந்தைகள் பாதுகாப்புக்குழுக் கூட்டம்: குழந்தை திருமணத்தைத் தடுக்க ஆலோசனை

27th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

மதுரை மாநகராட்சி மண்டலம் 4-இல் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குழந்தைகள் பாதுகாப்புக்குழு கூட்டத்தில் குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்துக்கு மண்டல உதவி ஆணையா் சுரேஷ்குமாா் தலைமை வகித்தாா். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் ஆற்றுப்படுத்துநா் சோபனா குமாா், குழந்தைகள் நலக்குழு உறுப்பினா் பாண்டியராஜன், மண்டல மருத்துவ அலுவலா் புவனேஸ்வரி சைல்டு லைன் உறுப்பினா் புளியம்மாள் மற்றும் இதர துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா். கூட்டத்தில், குழந்தைகள் நல பாதுகாப்பு தொடா்பான செயல்பாடுகள், குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்தல், குழந்தைகள் பிரச்னைகளுக்கு சைல்டுலைன் எண் 1098-ஐ பயன்படுத்தல், பாலியல் தொந்தரவில் இருந்து குழந்தைகளை பாதுகாத்தல், குழந்தை தொழிலாளா் ஒழிப்பு ஆகியவை குறித்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடா்பாக ஆலோசிக்கப்பட்டது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT