மதுரை

ஆட்டோவில் கஞ்சா கடத்திய இருவருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை

27th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

ஆட்டோவில் கஞ்சா கடத்திய இருவருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மதுரை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி-ஒட்டன்சத்திரம் சாலையில், கடந்த 2020-இல் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாா் வாகனச் சோதனையில் இருந்தனா். அப்போது ஆத்தூா் பிரிவு அருகே வந்த ஆட்டோவைச் சோதனையிட்டதில் அதில் வந்த இருவரிடம் 36 கிலோ கஞ்சா வைத்திருப்பது தெரியவந்தது.

கஞ்சாவை பறிமுதல் போலீஸாா், அதைக் கடத்தி வந்த ஆத்தூா் வீரகுமாா் (36), வேலூா் மாவட்டம் சின்ன அணைக்கட்டு பகுதியைச் சோ்ந்த சுரேஷ் (37) ஆகியோரைக் கைது செய்தனா்.

மதுரையில் உள்ள போதைப்பொருள் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.எஸ்.ஹரிஹரகுமாா், குற்றஞ்சாட்டப்பட்ட இருவருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை, தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT