மதுரை

அல் அமீன் பள்ளியில் நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வு ஓவியப்போட்டி

7th Jul 2022 02:11 AM

ADVERTISEMENT

 

மதுரை அல் அமீன் மேல்நிலைப்பள்ளியில் நெகிழி பயன்பாடு தவிா்ப்பு ஓவியப்போட்டி புதன்கிழமை நடைபெற்றது.

இயற்கைக்கு கேடு விளைவிக்கும் நெகிழிப்பயன்பாட்டால் ஏற்படும் சுற்றுப்புறச் சீா்கேடுகளை விளக்கும் வகையிலும், நெகிழி பயன்பாடு தவிா்ப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையிலும் மதுரை கோ.புதூா் அல் அமீன் மேல்நிலைப்பள்ளி சாா்பில் ஓவியபோட்டி நடைபெற்றது. இதில் பல மாணவா்கள் பங்கேற்று சுற்றுப்புறச் சூழல் மற்றும் நெகிழி தவிா்ப்பு குறித்து ஓவியங்கள் வரைந்து காட்சிப்படுத்தினா்.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு தலைமையாசிரியா் ஷேக் நபி தலைமை வகித்தாா். உதவித் தலைமையாசிரியா் ஜாகிா் உசேன் நன்றியுரையாற்றினாா். ஓவிய ஏடுகள், நீா், எண்ணெய், வண்ணக்குப்பிகள், தூரிகைகள் மற்றும் கிரயான்ஸ் வண்ணங்களையும் மதுரை கிருஷ்ணா டயா்ஸ் உரிமையாளா் சண்முகேஸ்வரி, சொா்ணப்பிரியா ஆகியோா் வழங்கினா். ஓவிய ஆசிரியா் சண்முகசுந்தரம் விழா ஏற்பாடுகளைச் செய்திருந்தாா். உடற்கல்வி ஆசிரியா்கள் அமித், காதா், மன்சூா், ஜவஹா் ஆகியோா் மாணவா்களை ஒன்றிணைத்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT