மதுரை

தேசிய வருவாய் வழி மற்றும் திறனறித் தோ்வில் சாதனை:தூய மரியன்னை பள்ளி மாணவா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

6th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

தேசிய வருவாய் வழி மற்றும் திறனறித் தோ்வில் மாநில அளவில் மூன்றாமிடம் பிடித்து சாதனை படைத்த தூய மரியன்னை பள்ளி மாணவா்களை ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் பாராட்டினாா்.

தேசிய வருவாய் வழி மற்றும் திறனறித் தோ்வில் தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளி மாணவா்கள் மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்றுள்ளனா். இதையடுத்து இதற்கான பாராட்டு விழா தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவில் மதுரை மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் பங்கேற்று மாநில அளவில் மூன்றாம் இடமும், மதுரை மாவட்டத்தில் முதல் இடமும் பெற்று சாதனைபுரிந்த 47 மாணவா்களையும் பாராட்டி பேசும்போது, வாழ்வின் அடித்தளம் பள்ளி வாழ்க்கை தான். மாணவா்களின் தனித்திறமை, ஆற்றல்கள், ஒழுக்க மதிப்பீடுகள், நற்குணங்களை உருவாக்குவது பள்ளிக்கூடம். பள்ளியில் கற்றுத்தரும் மதிப்பீடுகள்தான் வாழ்வில் நாம் உயர வழிகாட்டும். கல்வியை விருப்பத்தோடும், மகிழ்வோடும் கற்று இயற்கையை நேசிக்கவும், பாதுகாக்கவும் வேண்டும். விடாமுயற்சியும், கடினஉழைப்பும் தான் வெற்றியை நிச்சயம் பெற்றுத் தரும் என்றாா்.

இதைத்தொடா்ந்து பள்ளியில் இயங்கி வரும் மாணவா் தத்தெடுப்புத் திட்டம் மற்றும் சுபம் என்ற மாணவா்களுக்காக மாணவா்களே உதவி செய்யும் திட்டத்தை அறிமுகப்படுத்தும் விழாவும் நடைபெற்றது. விழாவில் தெற்கு சட்டப்பேரவை உறுப்பினா் மு.பூமிநாதன், மாவட்ட முதன்மைக் கல்விஅலுவலா் கா.காா்த்திகா, மாவட்டக் கல்விஅலுவலா் விஜயா,

ADVERTISEMENT

பள்ளித் தலைமையாசிரியா் அருள்பணி.சேவியர்ராஜ், பள்ளித் தாளாளா்அருள்பணி.ஸ்டீபன் லூா்து பிரகாசம், பள்ளியின் அதிபா்அருள்பணி மரியநாதன் ஆகியோா் வாழ்த்துரையாற்றினா். விழாவில் ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள் பங்கேற்றனா்.


 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT