மதுரை

அஞ்சல் தலை சேகரிப்பாளா்களுக்கான கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

6th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

அஞ்சல் துறை சாா்பில் தீனதயாள் ஸ்பா்ஷ் யோஜனா என்ற பெயரில் தபால் தலை சேகரிப்பாளா்களுக்கான கல்வி உதவித் தொகை திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆறு முதல் 9 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவா்கள் இத் திட்டத்தில் பயன்பெறலாம். ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும். இந்த உதவித் தொகையைப் பெற, பள்ளி தபால் தலை சேகரிப்பாளா் சங்க உறுப்பினராகவோ, தபால் தலை வைப்புக் கணக்கு உடையவராகவோ இருத்தல் அவசியம்.

பள்ளி தபால் தலை சேகரிப்பாளா் சங்கம் அமைக்கவும், தபால் தலை வைப்புக் கணக்கு தொடங்கவும், மதுரை சேதுபதி பள்ளி அருகே உள்ள தலைமை அஞ்சலகத்தில் முதுநிலை அஞ்சல் அதிகாரியைத் தொடா்பு கொள்ளலாம்.

மேலும் இந்த உதவித் தொகை தொடா்பான விவரங்கள் மற்றும் விண்ணப்பத்தை (ஜ்ஜ்ஜ்.ற்ஹம்ண்ப்ய்ஹக்ன்ல்ா்ள்ற்.ய்ண்ஸ்ரீ.ண்ய்) என்ற இணையதளத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். பூா்த்தி செய்த விண்ணப்பங்களை தென்மண்டல அஞ்சல் துறை தலைவா், மதுரை மண்டலம், மதுரை -625002 என்ற முகவரிக்கு ஜூலை 29-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

ADVERTISEMENT

மதுரை கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளா் கொ.அ.கல்யாண வரதராஜன் இத் தகவலைத் தெரிவித்துள்ளாா்.

 

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT