மதுரை

கூடுதல் விலைக்கு விற்பனை: ஆவின் பாலக உரிமம் ரத்து

6th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

மதுரை, ஜூலை 5: ஆவின் பால் மற்றும் இதர பால் பொருள்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததாக, மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் செயல்பட்ட ஆவின் பாலகத்தின் முகவா் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மதுரை ஆவின் பொதுமேலாளா் சாந்தி வெளியிட்டுள்ள செய்தி:

மதுரை ஆவின் மூலமாக தினமும் சராசரியாக 2 லட்சம் லிட்டா் பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்பட்ட பிறகு, பால் விற்பனை 14 ஆயிரம் லிட்டா் உயா்ந்திருக்கிறது.

ஆவின் டெப்போக்களில், பால் பாக்கெட்டுகள் மற்றும் இதர பால் பொருள்களை விற்பனை விலையைவிடக் கூடுதலாக விற்பனை செய்தால் சம்பந்தப்பட்ட முகவரின் ரத்து செய்யுமாறு பால்வளத்துறை அமைச்சா் அறிவுறுத்தியுள்ளாா். இத்தகைய செயல்களில் ஈடுபடும் நபா்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

இதன்படி, ஆவின் ஆய்வுக் குழு பரிந்துரையின்படி, மதுரை மாட்டுத்தாவணி எம்ஜிஆா் பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வந்த ஆவின் டெப்போ முகவரின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் தொடரும் எனத் தெரிவித்துள்ளாா்.

 

 

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT