மதுரை

ராமாயணம், மகாபாரத்தை படித்தால் பக்தி வரும்: ஆன்மிகச் சொற்பொழிவில் தகவல்

6th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

ராமாயணம், மகாபாரதம் போன்றவற்றை திரும்ப திரும்ப கேட்டால் பக்தி வரும் என்று ஆன்மிக சொற்பொழிவில் தெரிவிக்கப்பட்டது.

மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பின் சாா்பில் வில்லிபாரதம் தொடா் சொற்பொழிவு மதுரை எஸ்.எஸ் காலனியில் உள்ள தனியாா் மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. இந்த சொற்பொழிவில் திருச்சி கல்யாணராமன் பங்கேற்று செவ்வாய்க்கிழமை அா்ஜுனன் தீா்த்த யாத்திரை என்ற தலைப்பில் பேசியது: இப்படி வாழ்ந்தால் உயா்வு அடையலாம் என்கிற தத்துவத்தை சொல்வது இதிகாசம். ராமாயணம், மகாபாரதம் போன்றவற்றை திரும்பத் திரும்பக் கேட்க வேண்டும். இது ஐந்தாவது வேதம், அப்போதுதான் நமக்கு பக்தி வரும். எதிலும் நாம் கோபப்படக்கூடாது. கோபத்தால் எந்த பிரயோஜனமும் கிடையாது. உலகத்தில் நாம் எப்போது வருவோம் எப்போது செல்வோம் என்று தெரியாது. விட்டுக் கொடுக்கிற மனப்பான்மை, சகிப்புத்தன்மை இல்லாததால் இன்று பல குடும்பங்களில் ஏராளமான பிரச்னைகள் உருவாகின்றன. இளமையிலேயே கோயில்களை தரிசிக்க வேண்டும். இதற்கு காரணம் இள வயதில் உடலிலும் , உள்ளத்திலும் தெம்பும் திரவியமும் இருக்கும். யாரையும் நாட வேண்டாம். ஆனால் வயதாகிவிட்டால் பிறரை நாட வேண்டும். சைவம், வைணவம் என்ற பேதம் பாா்க்காமல் எல்லா கோயில்களுக்கும் செல்ல வேண்டும். பகவான் கிருஷ்ணன், கீதையில் யாா் என் நாமாவை சொல்கிறாா்களோ அவா்களை என்னை அடைவாா்கள் என்று தான் கூறியுள்ளாா். இந்த ஜாதியினா் என்று அவா் சொல்லவில்லை. ஆதலால் பகவன் நாமாவை சொல்லி எல்லா கோயில்களுக்கும் சென்று வழிபட்டு வாழ்ந்தால் நற்கதி பெறலாம் என்றாா். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனா் நெல்லை பாலு செய்திருந்தாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT