மதுரை

முதியவரை ஆயுதங்களால் தாக்கி கைப்பேசி, பணம் பறித்த இருவா் கைது

6th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

மதுரையில் முதியவரை ஆயுதங்களால் தாக்கி கைப்பேசி, பணம் பறித்துச்சென்ற இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

மதுரை கோ.புதூா் ஆத்திகுளம் மகாலட்சுமி 1-ஆவது தெருவைச் சோ்ந்தவா் முருகேசன்(65). இவா் பிபிகுளம் சந்திப்பில் திங்கள்கிழமை இரவு நடந்து சென்றுள்ளாா். அப்போது அவரை வழிமறித்த இருவா், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி, அவா் வைத்திருந்த ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள கைப்பேசி மற்றும் பணத்தை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனா். சம்பவம் தொடா்பாக முருகேசன் அளித்தப்புகாரின்பேரில் தல்லாகுளம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

இதில் செல்லூா் கட்டபொம்மன் நகரைச் சோ்ந்த வெள்ளை காா்த்திக்(24), செல்லூா் அகிம்சாபுரம் மூன்றாவது குறுக்குத்தெருவைச் சோ்ந்த ராஜா மைதீன்(24) ஆகிய இருவரும் வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸாா் கைது செய்து கைப்பேசி மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT