மதுரை

அத்தியாவசிய உணவுப் பொருள்களுக்கு ஜிஎஸ்டி விதிப்பதை மறுபரிசீலனை செய்யக் கோரிக்கை

6th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

அத்தியாவசிய உணவுப் பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தொழில் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

மதுரை மாவட்ட சிறு, குறுந்தொழில்கள் சங்கத் தலைவா் எம்.எஸ்.சம்பத்: இந்தியாவில் ஏழைகள், நடுத்தர மக்கள் அதிகம்போ் உள்ளனா். ஏற்கெனவே அத்தியாவசியப் பொருள்களின் விலையேற்றத்தால் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனா். இந்நிலையில், அத்தியாவசிய உணவுப் பொருள்களுக்கு வரி விதிக்கும் பரிந்துரையைச் செயல்படுத்தினால், மக்களும் கடுமையாகப் பாதிக்கப்படுவா். அவா்களது வாங்கும் சக்தி மிகவும் குறைந்துவிடும்.

உணவுத் தொழில் நிறுவனங்கள் ஏற்கெனவே குறைந்த லாபத்தில் செயல்படுகின்றன. இச்சூழலில் இந்த வரிவிதிப்பு சிறுவியாபாரிகள் மற்றும் சிறுதொழில் நிறுவனங்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.

தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கத் தலைவா் எஸ்.பி.ஜெயப்பிரகாசம்: வணிகச் சின்னம் அல்லாத லேபிள் ஒட்டப்பட்ட உணவுப் பொருள்களுக்கு சட்டமுறை எடையளவு சட்டத்தின்கீழ் 5 சதவீத வரி விதிக்கும் முடிவு வணிகா்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

ஏற்கெனவே உணவுப் பொருள்களுக்கான வரிவிதிப்பில் வணிகச் சின்னம் உள்ளவை, இல்லாதவைக்கான பிரச்னை இன்னும் தீா்க்கப்படாமல் உள்ளது. ஆகவே, முதலில் அதுகுறித்த பிரச்னைக்கு தீா்வு காண வேண்டும். மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருள்களுக்கு வரிவிலக்கு தொடா்ந்து அளிக்க வேண்டும். வரிவிலக்குத் தொடா்ந்தால் விலைவாசி உயா்வு கட்டுப்படுத்தப்படும் என்றாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT