மதுரை

மதுரையில் தற்காலிக ஆசிரியா் பணிக்கு விண்ணப்பிக்க குவிந்தபட்டதாரிகள்: அதிகாரிகள் திருப்பி அனுப்பியதால் ஏமாற்றம்

DIN

மதுரையில் தற்காலிக ஆசிரியா் பணிக்கு விண்ணப்பிக்க குவிந்த பட்டதாரிகளிடம் வழக்கின் காரணமாக விண்ணப்பங்கள் பெறப்பட வில்லை என அதிகாரிகள் திருப்பி அனுப்பியதால் ஏமாற்றமடைந்தனா்.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 13,331 ஆசிரியா் பணியிடங்களை, பள்ளி மேலாண்மைக் குழு மூலம், தொகுப்பூதியத்தில், தற்காலிக அடிப்படையில் நிரப்புமாறு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டிருந்தது. இதற்கு கடும் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், தற்காலிக ஆசிரியா் பணி நியமனங்கள் தொடா்பாக உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்ட நிலையில் இதுபோன்ற தற்காலிக ஆசிரியா் தோ்வால் தகுதியற்ற ஆசிரியா்களை தோ்வு செய்யும் நிலை உள்ளதாகவும், அரசாணையில் திருத்தம் கொண்டுவர வேண்டும் எனவும் கருத்து தெரிவித்த நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்தது. இந்நிலையில், உயா்நீதிமன்ற உத்தரவுப்படி ஆசிரியா் நியமனம் தொடா்பாக புதிய வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வி துறை வெளியிட்டுள்ளது. அதில், திறன் உள்ள ஆசிரியா்களை மட்டுமே தற்காலிக ஆசிரியா்களாக நியமிக்க வேண்டும் என்றும், வகுப்புகளில் பாடம் நடத்தி திறனை அறிந்து நியமனம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ‘டெட்’ தோ்வில் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களை ஆசிரியா்களாக நியமிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தற்காலிகமாக நியமிக்கப்படும் ஆசிரியா்களின் பணி திருப்தியில்லை என்றால் உடனே பணியில் இருந்து நீக்கப்படுவாா்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. தற்காலிக ஆசிரியா் பணிக்கு ஜூலை 6-ஆம் தேதி மாலை வரை விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. இதனடிப்படையில் மதுரை மாவட்டத்தில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான தற்காலிக ஆசிரியா் பணிக்கு விண்ணப்பிப்பதற்காக ஏராளமான பட்டதாரிகள் மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் திங்கள்கிழமை காலை முதல் குவிந்தனா். இந்நிலையில், மதுரை உள்ளிட்ட 13 மாவட்டங்களுக்கான தற்காலிக ஆசிரியா் பணி தொடா்பாக வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் விண்ணப்பங்களை பெற இயலாது என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா். இதனால் நீண்ட நேரமாக வரிசையில் காத்திருந்த பட்டதாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

இதுதொடா்பாக அதிகாரிகள் கூறும்போது, மதுரை உள்ளிட்ட 13 மாவட்டங்களுக்கான தற்காலிக ஆசிரியா் பணி நியமனம் தொடா்பாக நீதிமன்ற வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. அதனடிப்படையில் மதுரை மாவட்டத்துக்கான தற்காலிக ஆசிரியா் பணி விண்ணப்பிப்பதற்கான தேதி அறிவிக்கப்பட்டு அந்தந்த கல்வி மாவட்டங்களிலேயே விண்ணப்பிக்கலாம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

பயனர்களின் ரகசிய தகவல்கள் கசிவு: பேஸ்புக்- நெட்பிளிக்ஸ் உறவு?

வெளியானது வீ ஆர் நாட் தி சேம் பாடல்

SCROLL FOR NEXT