மதுரை

உசிலம்பட்டியில்  உழவர் ஈகியர்கள் வீரவணக்க நாள் அனுசரிப்பு

5th Jul 2022 03:20 PM

ADVERTISEMENT

உசிலம்பட்டி: மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உழவர் ஈகியர்கள் வீரவணக்க நாள்  இன்று அனுசரிக்கப்பட்டது. தமிழ்நாடு உழவர்கள்  மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.               

இலவச வேளாண் மின்சாரத்தைப் பெற்றுத் தந்த 60 ஈகியர்களுக்கும், பெற்று தந்த இலவச மின்சாரத்தை தில்லியில் உயிரை விட்டு போராடி காப்பாற்றிய 715 உழவர்களுக்கும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு  செவ்வாய்க்கிழமை மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிர்வாகிகள் மாநில துணைத் தலைவர் ஆர்.உதயகுமார், மாநில துணை பொதுச்செயலாளர் நேதாஜி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் காராமணி, உசிலம்பட்டி ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் சின்னன், 58 கிராம சங்கத்தின் தலைவர் சின்ன யோசனை, செயலாளர் பச்சைத் துண்டு பெருமாள் தேவர், ஒருங்கிணைப்பாளர் தமிழ்ச்செல்வன், இணைச் செயலாளர்கள் ஜான்சன், காட்டு ராஜா, துரைச்சிங்கம், மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர் ராஜாத்தி, ஜெயச்சந்திரன் மற்றும்  ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு உயிர் நீத்த ஈகியர்களுக்கு வீரவணக்கம் செலுத்தி, திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT