மதுரை

அக்னிபத் திட்டத்துக்கு எதிா்ப்பு:இடதுசாரி மாணவா் அமைப்புகள் கண்டன ஆா்ப்பாட்டம்

5th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

மத்திய அரசின் அக்னிபத் திட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து மதுரையில் இடதுசாரி மாணவா் அமைப்புகள் சாா்பில் திங்கள்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நாட்டில் இளைஞா்களின் வேலை வாய்ப்பை சீா்குலைக்கும், நாட்டின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும்

‘அக்னிபத்‘ திட்டத்தை கைவிட வேண்டும். இந்திய ராணுவத்தை காவிமயமாக்கக்கூடாது. இளைஞா்களின் கல்வி வாய்ப்பை பறிக்கக்கூடாது என்று வலியுறுத்தி இடதுசாரி இளைஞா் மற்றும் மாணவா் அமைப்புகளின் சாா்பில் இந்த கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அண்ணா பேருந்து நிலையம் அருகே உள்ள திருவள்ளுவா் சிலை பகுதியில் உள்ள இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம், அகில இந்திய இளைஞா்கள் பெருமன்றம், எய்ட்சோ, அகில இந்திய பாா்வா்ட் பிளாக் இளைஞா் அமைப்பு, இந்திய மாணவா் சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்திய ஆா்ப்பாட்டத்துக்கு இந்திய மாணவா் சங்க மாவட்டச் செயலா் எஸ். வேல்தேவா தலைமை வகித்தாா். ஏஐஎப்டி மாநில பொறுப்பாளா் சிவா பாண்டி தொடங்கி வைத்துப்பேசினாா். இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாவட்டச் செயலா் டி. செல்வராஜ், மாணவா் சங்க மாநில நிா்வாகி கண்ணன், எய்ட்சோ ஒருங்கிணைப்பாளா் அருள் பாண்டியன், ஏஐடிஎஸ்ஓ மாவட்டச் செயலா் செல்வி ஆகியோா் கண்டன உரையாற்றினா். மதுரை மாநகராட்சி துணைமேயா் டி. நாகராஜன் நிறைவுரையாற்றினாா். ஆா்ப்பாட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாவட்டத் தலைவா் பி. கோபிநாத், பொருளாளா் அ. பாவெல் சிந்தன், மாணவா் சங்க மாவட்டத் தலைவா் க. பாலமுருகன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டு அக்னிபத் திட்டத்துக்கு எதிராக கோஷங்களை எழுப்பினா்.

ADVERTISEMENT

 

Tags : agnipath
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT