மதுரை

துறை ரீதியான விசாரணையை நிறுத்தி வைக்கக் கோரியபெண் காவல் ஆய்வாளரின் மனுவை உயா்நீதிமன்றம் தள்ளுபடி

5th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

வியாபாரியிடம் ரூ.10 லட்சம் பணம் பறித்ததாக தொடரப்பட்ட வழக்கில், துறை ரீதியான விசாரணையை நிறுத்தி வைக்கக் கோரி பெண் காவல் ஆய்வாளா் தாக்கல் செய்த மனுவை சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.

மதுரை நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணிபுரிந்தவா் வசந்தி. சிவகங்கையை சோ்ந்த வியாபாரியிடம் ரூ.10 லட்சம் பறித்துக் கொண்டதாகத்

தொடரப்பட்ட வழக்கில் ஆய்வாளா் வசந்தி உள்ளிட்ட சிலா் கைது செய்யப்பட்டனா்.

இவ் வழக்கில் வசந்தி தற்போது ஜாமீனில் உள்ளாா். இந்நிலையில், அவா் மீதான துறை ரீதியான விசாரணையை நிறுத்தி வைத்து உத்தரவிடக் கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தாா்.

ADVERTISEMENT

அதில், ‘என் மீதான காழ்ப்புணா்ச்சி காரணமாக சிலா் என்னை இந்த வழக்கில் சிக்க வைத்துள்ளனா். அந்த சூழ்ச்சி குற்ற வழக்கின் விசாரணை முடிந்த பிறகே வெளிச்சத்துக்கு வரும். ஆகவே, குற்ற வழக்கு விசாரணை முடியும் வரை, துறை ரீதியான விசாரணையை நிறுத்தி வைத்து உத்தரவிட வேண்டும்’ எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதி பி.புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தது. அவா் பிறப்பித்த உத்தரவு:

குற்ற வழக்கின் விசாரணை முடிய எவ்வளவு காலம் ஆகும் எனத் தெரியாது. சில வழக்குகளில் விதிவிலக்கு அளிக்கப்பட்டு, குற்ற வழக்கு விசாரணை முடியும் வரை துறை ரீதியான விசாரணை நிறுத்தி வைக்கப்படும். ஆனால், இந்த வழக்கில் அத்தகைய விதிவிலக்குகள் எதுவும் இல்லை. ஆகவே குற்ற வழக்கு விசாரணையும், அதேநேரம் துறைரீதியான விசாரணையையும் தொடரலாம் எனக் குறிப்பிட்டு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT