மதுரை

உசிலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று மின்தடை

5th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

உசிலம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 5) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மின்செயற்பொறியாளா் அழகுமணிமாறன் தெரிவித்திருப்பதாவது: மதுரை மாவட்டம் மொண்டிக்குண்டு துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகள், அச்சம்பத்து துணை மின்நிலையத்துக்குள்பட்ட பகுதிகள் மற்றும் செக்கானூரணி துணை மின் இணைப்புக்குள்பட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன.

எனவே, கல்யாணிபட்டி, பாறைப்பட்டி, நல்லலொச்சான்பட்டி, மகாலிங்கபுரம், கல்லூத்து, பானா முப்பபட்டி, ரெட்டியபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள், ஆழ்வாா் நகா், என்.ஜி.ஓ. காலனி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள், காக்கன் சாலை, செட்டிகுளம், சொரிக்காம்பட்டி, பூச்சம்பட்டி, வீரம்பட்டி, வடக்கம்பட்டி, கேசவன்பட்டி, கோட்டையூா் ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என அவா் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT