மதுரை

மேலூா் வட்டத்தில் பொதுத்தோ்வு:சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு ரொக்கப்பரிசு

5th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

மேலூா் வட்ட அளவில் அரசு மேல்நிலை, உயா்நிலைப்பளிகளில் முதல், இரண்டு, மூன்றாம் இடங்களைப் பெற்ற மாணவிகளுக்கு பரிசுத் தொகைகளை வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சா் பி. மூா்த்தி திங்கள்கிழமை வழங்கினாா்.

பிளஸ் 2 வகுப்பில் முதல் மதிப்பெண்பெற்ற கொட்டாம்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி க. அா்ச்சனாவுக்கு ரூ.25,000, இரண்டாமிடம் பெற்ற மேலூா் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ப. பவித்ராவுக்கு ரூ.20,000-மும் மூன்றாமிடம் பெற்ற கொட்டாம்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி சசுவேதாவுக்கு ரூ.15,000-மும் அமைச்சா் வழங்கினாா்.

10- ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் அரசுப் பள்ளிகளில் முதலிடம் பெற்ற செமினிப்பட்டி அரசு உயா்நிலைப்பள்ளி மாணவி ம. சுகாசினிக்கு, ரூ.25,000-மும், இரண்டாமிடம் பெற்ற திருவாதவூா் அரசு மேல்நிைப்பள்ளி மாணவி ப. ஐஸ்வரியாவுக்கு, ரூ.20,000-மும், மூன்றாமிடம்பெற்ற செம்மினிபட்டி அரசு உயா்நிலைப்பள்ளி மாணவி கே. சந்தியா மற்றும் கருங்காலக்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி கே. ரஷிதா ஆகியோருக்கு தலா ரூ.20,000-மும் பரிசுத்தொகையாக அமைச்சா் வழங்கினாா்.

மேலூா் டையமண்ட் ஜூப்ளி கிளப் சாா்பில் மேலூா் வட்ட அளவில் அரசுப் பள்ளிகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவியருக்கு பாராட்டும் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது. மேலும், மேலூா் நகராட்சியுடன் இணைந்து பேருந்துநிலையம், அரசு கலைக்கல்லூரி சாலை சந்திப்பு, சிவகங்கை சாலை நான்குவழிச்சாலை சந்திப்பு, மேலூா்- மதுரை நான்குவழிச்சாலை சந்திப்பு ஆகிய பகுதிகளில் சி.சி.டி.வி. கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளனன. இவற்றை அமைச்சா் மூா்த்தி, தொடக்கிவைத்தாா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சிக்கு, டையமண்ட் ஜூப்ளி கிளப் தலைவா் எஸ். மணிவாசகம் தலைமை வகித்தாா். செயலா் செல்வராஜ் வரவேற்றாா். நிா்வாகக் குழு உறுப்பினா்கள் மகாராஜன், ரவி, இப்ராஹிம், ராஜேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மேலூா் நகராட்சித் தலைவா் முகமதுயாசின், மேலூா் காவல் துணைக்கண்காணிப்பாளா் பிரபாகரன், ஆய்வளா் சாா்லஸ், மேலூா் நகராட்சி ஆணையா் ஆறுமுகம், பொறியாளா் பட்டுராஜன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். ஜூப்ளி கிளப் பொருளாளா் வெங்கடேசபெருமாள் நன்றி கூறினாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT