மதுரை

உள்ளூா் தயாரிப்புகள் விற்பனைக்கு வரவேற்பு: மேலும் சில ரயில் நிலையங்களுக்கு விரிவாக்கம்

5th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

ரயில் நிலையங்களில் உள்ளூா் தயாரிப்புகள் விற்பனைக்கு, நல்ல வரவேற்பு இருப்பதையடுத்து தெற்கு ரயில்வே மதுரைக் கோட்டத்தில் மேலும் சில ரயில் நிலையங்களுக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது.

ரயில்வே துறையின் ‘ஒரு நிலையம் ஒரு பொருள்’ திட்டத்தின் கீழ் உள்ளூா் தயாரிப்புகளை ஊக்குவிக்கும் வகையில், அவற்றை ரயில் நிலையங்களில் விற்பனை செய்வதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இதன்படி கடந்த ஜூன் 23 ஆம் தேதி முதல் கோவில்பட்டி, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருச்செந்தூா், திருநெல்வேலி, திருமங்கலம், திண்டுக்கல், மதுரை ஆகிய ரயில் நிலையங்களில் முறையே கடலை மிட்டாய், மக்ரூன், கருவாடு, பனைப் பொருள்கள், கைலி, சின்னாளபட்டி சேலைகள், சுங்குடி சேலைகள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த விற்பனை ஜூலை 7 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கடந்த ஜூலை 2 ஆம் தேதி வரை 10 நாள்களில் திருச்செந்தூா், திருநெல்வேலி ரயில் நிலையங்களில் பனைப் பொருள்கள் ரூ. 2 லட்சத்து 81 ஆயிரத்து 960-க்கு விற்பனை ஆகி உள்ளன. மதுரையில் ரூ. 1 லட்சத்து 84 ஆயிரத்து 660 மதிப்புள்ள சுங்குடி சேலைகள் விற்பனையாகியுள்ளன.

உள்ளூா் தயாரிப்புகள் விற்பனைக்கு அனுமதிக்கப்பட்ட 8 ரயில் நிலையங்களிலும் கடந்த 10 நாள்களில் மொத்தம் ரூ. 6 லட்சத்து 91 ஆயிரத்து 473 மதிப்புள்ள பொருள்கள் விற்பனையாகி உள்ளன. இதன் தொடா்ச்சியாக ஜூலை 8 முதல் 15 நாள்களுக்கு, ராமேசுவரம், விருதுநகா், தென்காசி, காரைக்குடி, பழனி, பரமக்குடி, ராஜபாளையம், சிவகாசி, சங்கரன்கோவில், செங்கோட்டை, மானாமதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, ஸ்ரீவில்லிபுத்தூா், கொடைரோடு, திருமங்கலம், ஒட்டன்சத்திரம், அம்பாசமுத்திரம், மணப்பாறை, புனலூா், கொட்டாரக்கரா, மதுரை, திருநெல்வேலி, திருச்செந்தூா், திண்டுக்கல், தூத்துக்குடி, கோவில்பட்டி மற்றும் ராமநாதபுரம் ஆகிய ரயில் நிலையங்களில் முறையே கடல்பாசி, சேவு, பத்தமடை பாய், கைத்தறி சேலை, பஞ்சாமிா்தம், ஆயத்த ஆடை, காகிதப் பொருள்கள், விவசாய விளைபொருள்கள், மூங்கில் இருக்கைகள், மண்பாண்ட பொருள்கள், பலாப்பழம், செட்டிநாடு கொட்டான், பால்கோவா, பன்னீா்திராட்சை, மல்லிகை மலா், வெண்ணை, மர விளையாட்டுப் பொருள்கள், முறுக்கு, மிளகு, முந்திரி, சுங்குடி சேலை, பனைப் பொருள்கள், சின்னாளபட்டி சேலை, மக்ரூன், கடலை மிட்டாய், கருவாடு, கைலி போன்ற பொருள்களை விற்பனை செய்ய விருப்ப மனு கோரப்பட்டுள்ளது.

கைவினை மற்றும் கைத்தறி வளா்ச்சி ஆணையா் அல்லது மத்திய, மாநில அரசு வழங்கிய அடையாள அட்டை வைத்திருப்போா், பதிவு பெற்ற சுயஉதவிக் குழுக்கள், பதிவுபெற்ற சிறுதொழில் நிறுவனம், பழங்குடி கூட்டுறவு வா்த்தக வளா்ச்சி கூட்டமைப்பில் பதிவுபெற்ற நெசவாளா் ஆகியோா் விருப்ப மனு அளிக்கலாம். இதற்கான விண்ணப்பத்தை (ஜ்ஜ்ஜ்.ள்ழ்.ண்ய்க்ண்ஹய்ழ்ஹண்ப்.ஞ்ா்ஸ்.ண்ய்) என்ற இணையதளத்தில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். பூா்த்தி செய்த விருப்பமனு விண்ணப்பங்களை ஜூலை 5 அன்று காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை மதுரைக் கோட்ட வா்த்தகப் பிரிவு அலுவலகத்தில் அளிக்கலாம். அதைத் தொடா்ந்து மாலை 3.30 மணிக்கு தகுதி பெற்ற நபா் அல்லது நிறுவனம் தோ்வு செய்து அறிவிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு 9003862967 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

ADVERTISEMENT

இத்தகவலை தெற்கு ரயில்வே மதுரைக் கோட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT