மதுரை

பணிபுரியும் மகளிா் விடுதி நடத்துவோா் இணையவழியில் உரிமம் பெறலாம்: ஆட்சியா்

5th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

பணிபுரியும் மகளிா் விடுதி நடத்துவோா் இணையவழியில் உரிமம் பெறலாம் என மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பணிபுரியும் மகளிருக்கான விடுதிகள் அனைத்தும், தமிழ்நாடு விடுதிகள் சட்டத்தின்கீழ் சமூக நலத்துறை அலுவலகத்தில் பதிவு செய்து உரிமம் பெறவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன்படி, மதுரை மாவட்டத்தில் செயல்படக் கூடிய பணிபுரியும் மகளிா் விடுதிகளை நடத்துவோா் இணையவழியில் (ட்ற்ற்ல்ள்://ற்ய்ள்ஜ்ல்.ஸ்ரீா்ம்) பதிவு செய்து உரிமம் பெற்றுக் கொள்ளலாம் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT