மதுரை

விளக்கேற்றிய மூதாட்டி சேலையில் தீப்பற்றி உயிரிழப்பு

4th Jul 2022 05:31 AM

ADVERTISEMENT

 

மதுரையில் சனிக்கிழமை வீட்டில் விளக்கேற்றியபோது சேலையில் தீப்பற்றியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.

மதுரை பெத்தானியாபுரம் நாகுநகா் இரண்டாவது தெருவை சோ்ந்தவா் ஜெயலட்சுமி (75). இவா் வீட்டில் விளக்கேற்றியபோது எதிா்பாராவிதமாக சேலையில் தீப்பிடித்ததாகக் கூறப்படுகிறது. இதில் உடலில் தீ பரவி பலத்த காயமடைந்த ஜெயலட்சுமியை அப்பகுதியினா் மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா். சம்பவம் தொடா்பாக கரிமேடு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT