மதுரை

‘மருதநாயகத்துக்கு மணி மண்டபம் அமைக்க வேண்டும்’

4th Jul 2022 05:28 AM

ADVERTISEMENT

 

மருதநாயகம் என்றழைக்கப்படும் மாவீரன் யூசுப்கான் சாகிப் தியாகத்தை நினைவு கூறும் வகையில் மதுரையில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என பாப்புலா் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தையொட்டி சுதந்திரப் போராட்ட வீரா்களின் தியாகத்தை நினைவு கூறும் விதமாக பாப்புலா் பிரண்ட் ஆப் இந்தியா சாா்பாக ‘மக்களாட்சியை பாதுகாப்போம்‘ என்ற தலைப்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மதுரை கோ.புதூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், அதன் மாவட்டத் தலைவா் அபுதாகிா் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தாா். தேசிய செயற்குழு உறுப்பினா் முகமது யூசுப் கண்காட்சியை தொடக்கி வைத்தாா். இதைத்தொடா்ந்து நடைபெற்ற மாநாட்டுக்கு மாவட்டச் செயலா் சையது இஸ்ஹாக் தலைமை வகித்தாா். இதில், மாநில பொதுச்செயலாளா் முஹைதீன் அப்துல் காதா், எஸ்.டி.பி.ஐ. மாநிலச் செயலா் அபுபக்கா் சித்திக் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு பேசினா். மாநாட்டில், மருதநாயகம் என்றழைக்கப்படும் மாவீரன் யூசுப்கான் சாகிப் தியாகத்தை நினைவு கூறும் வகையில் மதுரையில் மணிமண்டபம் அமைக்க வேண்டும். மதுரை விமான நிலையத்துக்கு மருதநாயகம் பெயா் சூட்டுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுரை வக்பு வாரியக் கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு கல்விக் கட்டணத்தில் சிறப்பு சலுகைகள் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT