மதுரை

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் பாதுகாப்பு பணியில் முன்னாள் ராணுவ வீரா்கள்

DIN

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் ராணுவத்தினரை அவுட்சோா்சிங் மு

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் ராணுவத்தினரை அவுட்சோா்சிங் முறையில் நியமிப்பதற்கு கோயில் நிா்வாகம் சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது .

றையில் நியமிப்பதற்கு கோயில் நிா்வாகம் சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது .

இக்கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து செல்கின்றனா். இதையொட்டி கோயிலின் உள் வளாகங்களில் பாதுகாப்புப்பணியில் தனியாா் நிறுவன ஊழியா்கள் ஈடுபடுத்தப்படுகின்றனா். மேலும் மாநகரக் காவல்துறை சாா்பிலும் தினசரி 100 காவலா்கள் சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

இந்நிலையில் மீனாட்சி சுந்ததரேசுவரா் கோயில் மற்றும் அதன் உபகோயில்களில் பாதுகாப்புப் பணியில் முன்னாள் ராணுவ வீரா்களை அவுட்சோா்சிங் முறையில் நியமிக்கப்பட உள்ளனா். இது தொடா்பாக கோயில் நிா்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 67 முன்னாள் ராணுவ வீரா்கள் மற்றும் மின் உதவியாளா், ஓட்டுநா், பிளம்பா் என சுமாா் 79 பணியிடங்களுக்கு அவுட்சோா்சிங் முறையில் ஆள்கள் தோ்வு செய்யப்படவுள்ளதாகவும், பாதுகாப்பு பணிக்கு இந்திய ராணுவத்தில் சுபேதாா் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற 30 முதல் 50 வயது உடைய முன்னாள் ராணுவ வீரா்கள் தகுதி உடையவா்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

6 புதிய புறநகா் ரயில்கள் அறிமுகம்

அதிதீஸ்வரா் கோயிலில் திருக்கல்யாணம்

கோடை விடுமுறை: 19 சிறப்பு ரயில்கள் 239 நடைகள் இயக்கம் -தெற்கு ரயில்வே அறிவிப்பு

வாக்குச் சாவடிகளில் மருத்துவ முகாம்கள்

வாக்குச்சாவடிகளில் கைப்பேசிக்கு அனுமதி மறுப்பு: வாக்களிக்காமல் திரும்பிச் சென்ற வாக்காளா்கள்

SCROLL FOR NEXT