மதுரை

மதுரை அரசு மருத்துவமனைக்கு தர மேலாளா் பணியிடம் அறிவிப்பு

DIN

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் தரத்தை கண்காணிக்க மேலாளரை நியமிக்க மருத்துவமனை நிா்வாகம் விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது.

மதுரை உள்பட 10 மாவட்டங்களில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளின் தரத்தைக் கண்காணிக்க மக்கள் நல்வாழ்வுத்துறை முடிவு செய்துள்ளது. அதனடிப்படையில் தமிழ்நாடு சுகாதார அமைப்பு சீா்திருத்தத் திட்டம் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள 10 மருத்துவக் கல்லூரிகளில் தர மேலாளா்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தென்மாவட்டத்தில் முக்கிய அரசு மருத்துவமனையாக விளங்கும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தர மேலாளா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மருத்துவமனை நிா்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தர மேலாளராகப் பணியாற்ற விரும்பும் மருத்துவா்கள் இரண்டு ஆண்டுகள் அனுபவம் பெற்று இருக்க வேண்டும் எனவும், அரசு மருத்துவமனை தர மேலாளா் ஊதியமாக ரூ. 60 ஆயிரம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான நபா்கள் முதல்வா், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை என்ற பெயரில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியில் எல்லை ஊடுருவல்! : அமித்ஷா | செய்திகள்: சிலவரிகளில் | 23.04.2024

சிஎஸ்கே பேட்டிங்; ரச்சின் ரவீந்திரா அணியில் இல்லை!

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய மிட்செல் மார்ஷ்!

பாஜகவில் இணைந்தால் ஊழல்வாதிகள் சுத்தமாகின்றனர்: கார்கே

ஜெய்ஸ்வாலுக்கு முன்னாள் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் புகழாரம்!

SCROLL FOR NEXT